பொது செய்தி

தமிழ்நாடு

கலையால் வாழும் உல்லன் பொம்மை 85 வயதிலும் தளராத இளசு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 கலையால் வாழும் உல்லன் பொம்மை 85 வயதிலும் தளராத இளசு

விருதுநகர்:மனிதர்கள் ஒவ்வொ ருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை நிலை. என்னவாக இருந்தாலும் எந்த வயதானலும் கூட வாழ்ந்தே தீர வேண்டும் என்பது நியதி. இதிலும் வலிகள், சோகங்கள் என எது இருந்தாலும் வேலை பார்த்தால் எல்லாம் போய்விடும்.

அதுவும் மனதுக்கு பிடித்த வேலை செய்தால் குழந்தைபோன்றே மாறிவிடுகிறோம். அதன்படி விருதுநகர் முத்தால் நகரை சேர்ந்த கலாதேவி 85 , உல்லன் நுாலில் தொப்பி, பர்ஸ்கள், சிவலிங்கம், முருகர், விநாயகர் உள்ளிட்ட பொம்மை வகைகள் செய்கிறார். சிவகங்கை கண்டரமாணிக்கத்தில் பிறந்த இவர் திருமணமாகி விருதுநகர் வந்தார்.

சிறு வயது முதலே பொம்மைகள் செய்வதில் ஆர்வம் உண்டு. பிள்ளைகளுக்கு திருமணம், கணவர் இறப்புக்கு பின் பிழைப்புக்காக இதை செய்து விற்றார். இளம் வயதில் நாடகங்களில் நடித்ததால் கலைஞர்களுக்கான ஓய்வூதியமும் பெறுகிறார். இதில் வீட்டு வாடகை போக மீதி பணத்தில் வண்ண உல்லன் நுால்களை வாங்கி குவிக்கிறார்.

இந்த வயதிலும் தளராமல் கைவினை பொருட்களை செய்கிறார். இவரது தனித்திறமையை பாராட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் குடிசை தொழில் செய்பவர் என்ற அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. சொந்த உழைப்பில் வாழும் இவர் போன்றோர்தான் மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X