தொழிலாளர் பற்றாக்குறையால்ஏலத்தோட்ட பணிகளுக்கு சிக்கல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கம்பம்:தொழிலாளர்கள் தட்டுப்பாட்டால் ஏலத்தோட்டங்களில் பணிகள் பாதிக்கப்பட்டள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. ஏலத்தோட்டங்களுக்கு கம்பத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட ஜீப்களில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். கொரோனாவால் தொழிலாளர்கள் செல்ல முடியவில்லை. தொழிலாளர் பற்றாக்குறையால் ஏலத்தோட்டங்களில் பணிபாதித்துள்ளது.

தற்போது பீர்மேடு, குட்டிக்கானம், வண்டிப்பெரியாறு பகுதிகளில், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வைத்து ஏலத்தோட்ட வேலைக்கு பயன்படுத்துகின்றனர். கூலி, பயண செலவு அதிகரித்துள்ளது. ஏல விவசாயிகள் கூறுகையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் சீசன் காய் எடுப்பு ஆரம்பமாகும். உரம் இடுதல்,கவாத்து பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப் படுகின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்களை வைத்து வேலை செய்கிறோம். ஏலத்தோட்ட பணிகளில் அனுபவம் இல்லாதவர்களால் பணி விரைவாக மேற்கொள்ள முடியவில்லை.' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X