பறிமுதல் தேக்கு கட்டைகள் ஏலம் விட நடவடிக்கை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கம்பம்:கம்பம் வனச்சரகத்தில் வீடுகளில் பதுக்கியதை பறிமுதல் செய்த தேக்கு, வேங்கை மரக்கட்டைகளை ஏலம் விட வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கூடலுர், கம்பத்தில் 28 ஆண்டுகளுக்கு முன் வீடுகளில் பதுக்கி வைத்த மரக்கட்டைகளை அப்போது ரேஞ்சராக இருந்த ராஜலிங்கராஜா பறிமுதல் செய்து, அலுவலக வளாகத்தில் அடுக்கி வைத்தார். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். கோர்டில் வழக்கு நடந்து வந்ததால் ஏலம் விடவில்லை. தற்போது சில வழக்குகள் முடிந்துள்ளன.

எனவே வழக்கு முடிந்துள்ள கட்டைகளை ஏலம் விட, வனத்துறை முடிவு செய்துள்ளது. உதவி வனப்பாதுகாவலர் குகனேஷ் கூறுகையில், வழக்கு இல்லாத கட்டைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏல நடவடிக்கைகள் வார்டன் உத்தரவில் நடைபெறும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X