அதிவேக வாகனங்களால்  வன விலங்குகள் சிரமம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி கணவாய் சாஸ்தா மாலை கோயில் அருகே உணவு, நீருக்கு வரும் வன விலங்குகளுக்கு வாகனங்களால் பாதிப்பு ஏற்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை கணவாய் மலை தண்ணீர் தொட்டி, குழாயில் எந்நேரமும் தண்ணீர் இருக்கும். பக்தர்கள் தரும் உணவுக்காகவும் குரங்குகள் கூட்டமாக வந்து செல்லும். கோயில் வளாகத்தில் உணவு, தண்ணீருக்காக ரோட்டை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் அடிபடுகின்றன. காலை, மாலையில் மான்கள் இரவில் காட்டுப்பன்றிகள், கரடிகள் வந்து செல்கின்றன. வன விலங்குகள் நடமாட்டத்தை கவனத்தில் கொண்டு வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனத்துறையினர் கூறுகையில், ''தேசிய நெடுஞ்சாலை கணவாய் வனப்பகுதி வழியாக செல்கிறது. இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வாய்ப்பில்லை. வேகத்தடுப்புகள், எச்சரிக்கை போர்டுகள் வைத்து வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்தலாம்.'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X