கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'நீட்' வழக்கில் சிக்கிய மாணவர் கல்வி சான்றிதழ் கோரி வழக்கு

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை : 'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கிய மாணவர், கல்வி சான்று கோரி, உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு தொடர்ந்துள்ளார்.

'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், சென்னை மாணவர், உதித் சூர்யா கைதாகி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கை, தேனி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.உயர் நீதிமன்ற கிளையில், உதித் சூர்யா தாக்கல் செய்த மனுவில், 'போலீசார் என்னை கைது செய்தபோது, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்று, ஜாதிச் சான்றை பறிமுதல் செய்தனர். கலை, அறிவியல் கல்லுாரியில் சேர, கல்விச் சான்று தேவைப்படுகிறது.'அவற்றை வழங்க போலீசாரிடம் கோரினேன். நடவடிக்கை இல்லை.

என் அசல் கல்விச் சான்றுகளை வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.நீதிபதி, ஆர்.பொங்கியப்பன் நேற்று விசாரித்தார்.அரசுத் தரப்பில், 'சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில், வழக்கு ஆவணங்களுடன், மனுதாரரின் கல்விச் சான்று தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது' என தெரிவிக்கப் பட்டது.மாணவர் தரப்பில், 'கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு எவ்வித ஒப்புதலும் தரப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.நீதிபதி, ''இவ்விவகாரம் குறித்து, அரசுத் தரப்பில் இன்று தெளிவுபடுத்த வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
24-ஜூலை-202005:14:59 IST Report Abuse
Girija உனக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லையே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X