அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியுடன் கூட்டணியா?அமைச்சர் ஜெயகுமார் பதில்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
  ரஜினியுடன் கூட்டணியா?அமைச்சர் ஜெயகுமார் பதில்

சென்னை : -''நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து, கட்சி தான் முடிவு செய்யும்,'' என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி, சுமூகமாக உள்ளது. நடிகர் ரஜினி முதலில் கட்சி துவக்கட்டும். அதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.யார் வேண்டுமானாலும், கட்சி துவங்கலாம். தேர்தல் நேரத்தில், அவரோடு கூட்டணி வைப்பதா; யாருடன் கூட்டணி என்பதை, கட்சிதான் முடிவு செய்யும்.மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம், அரசுக்கு இல்லை. கொரோனாவில் இறந்தால், பட்டவர்த்தனமாக தெரியும். மறைப்பதால், அரசுக்கு எந்த பயனும் கிடையாது. ஒருவர் இறந்ததும், அவருக்கு பரிசோதனை செய்யப்படும்; முடிவுகள் வர தாமதமாகும்.அரசியல் செய்ய, ஸ்டாலினுக்கு ஏதாவது காரணம் தேவை.

மக்களை திசை திருப்புவதற்காக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சமூக வலைதளங்களில், தவறான விஷயங்களை பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இரண்டு பெண்கள், கொரோனா குறித்து பேசும் ஆடியோ பீதியை கிளப்புவதாக உள்ளது. இது குறித்து, சைபர் கிரைம் விசாரிக்கும்.நடிகர் ரஜினி எந்த அடிப்படையில், இ- - பாஸ் பெற்றார் என்பதை, ஆய்வு செய்தால் தான் தெரியும்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
24-ஜூலை-202014:04:02 IST Report Abuse
R chandar TN Government is doing very well on this crisis , they already trained and learned during various calamities happened under their regime , with that experience they should resolve this problem and solve this issue they need to concentrate on cleanliness of garbage , and try to supply water through pipeline instead of lorry services , they should see that all supply of water to be enabled through pipeline with good pressure and see to it all houses gets water in pipe either to the pump or if sump available it should be supplied to the sump ,if required distribution of water and electricity should given to good company like L&T and the rates are to be monitored by Tamilnadu government. Garbage should be picked up from source and segregated and inform people to give garbage to the garbage picker , remove all bins and see to it all street cleaned up on all days, announce cash compensatory support for ration card holder who are opting out of ration items, stop all freebies give free only for education,health , and cash support of social security and support by way of cash to every ration card holder of Tamilnadu.
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-ஜூலை-202013:30:25 IST Report Abuse
இந்தியன் kumar முன்னாள் சபாநாயகர் இந்நாள் அரசின் கட்சியின் செய்தி தொடர்பாளர்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
24-ஜூலை-202013:03:06 IST Report Abuse
தல புராணம் எந்த கட்சி முடிவு செய்யும்ன்னு கொஞ்சம் வெளக்கமா சொன்னா நல்லா இருக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X