திருக்கோவில் டிவி வீடியோ சேகரிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவில் 'டிவி' வீடியோ சேகரிப்பு

Added : ஜூலை 24, 2020
Share

திருப்பூர்:திருக்கோவில் 'டிவி'யில் ஒளிரப்பு செய்ய, பாரம்பரிய திருவிழா வீடியோக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்காக, 'திருக்கோவில்' என்ற பெயரில், 'டிவி' சேனல் துவக்க இருக்கிறது.முதல்கட்டமாக, மருதமலை, சிவன்மலை, மாசாணியம்மன் கோவில் படக்காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அடுத்து, உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட, கோவில்களின் விவரம் சேகரிக்கப்பட உள்ளது.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவில் வரலாறு, கோபுரம், மலைமீது உள்ள கோவிலின் தோற்றம், கோவில் அமைப்பு, தல விருட்சம், பரிவாரங்கள், தமிழ் வருடத்தில் நடக்கும் திருவிழா, தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன், 'வீடியோ' தயார் செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X