பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரின் மக்கள் பணி விழிப்புணர்வு குறும்படம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 போலீசாரின் மக்கள் பணி  விழிப்புணர்வு குறும்படம்

பல்லடம்:சுக துக்கங்களை மறந்து, மக்களுக்காக பணியாற்றி வருவதாக, குறும்படத்தில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.தமிழகம் முழுவதும் போலீசார், கொரோனா நோய் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளி மாநில, மாவட்டங்கள் சென்று திரும்பியவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். போலீசார் சிலரும் நோய் தாக்குதலுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.நெருக்கடியான பணி சூழலில் இருக்கும் எஸ்.ஐ., ஒருவர், குடும்பத்தினரை பிரிந்து எவ்வாறு பணியாற்றுகிறார்; அவருக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து, குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. பல்லடம் எஸ்.ஐ., சந்திரபோஸ் பங்கேற்று நடித்துள்ள குறும்படம், தமிழக காவல்துறையால் வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X