பொது செய்தி

தமிழ்நாடு

பி.ஆர்க்., நுழைவு தேர்வு: ஆக., 29க்கு ஒத்திவைப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கோவை:பி.ஆர்க்., கட்டட கலை படிப்பில் சேருவதற்கான 'நாட்டா' தேசிய நுழைவுத்தேர்வு ஆக., 29க்கு ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது.கட்டடக்கலை குழுமம்வெளியிட்டுள்ள அறிக்கை:'நாட்டா' பகுதி-1(வரையும் திறன்) மற்றும் பகுதி-2 (பொது திறனாய்வு மற்றும் விஞ்ஞான ரீதியிலான திறனறிதல்) தேர்வுகள் ஆன்லைன் மூலம் திறனாய்வு தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது. ஆக., 1ல் நடக்க இருந்த பகுதி-1 தேர்வு, ஆக., 29க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பகுதி-1 தேர்வுக்கான பாடங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பகுதி-2 தேர்வுக்கான தேதி விரைவில் வெளியிடப்படும்.தேர்வு எழுதும் மாணவர்கள் இதர தகவல்களை www.coa.gov.in மற்றும் www.nata.in என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு helpdesk.nata2020@gmail.com என்ற முகவரியிலும், 93192 75557, 73034 87773 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X