சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகை பற்றி அவதுாறு: சாலிகிராம பெண் கைது

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 நடிகை பற்றி அவதுாறு: சாலிகிராம பெண் கைது

சென்னை : நடிகை வனிதா குறித்து, அவதுாறாக பேசிய புகாரில், சாலிகிராமத்தைச் சேர்ந்த சூர்யாதேவி என்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா; நடிகை. இவர், அடுத்தடுத்து இருவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்ற நிலையில், மூன்றாவதாக பீட்டர்பால் என்பவரை, சில தினங்களுக்கு மணந்தார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், வனிதாவை, பீட்டர்பால் மணந்ததாக கூறப்பட்டது. நடவடிக்கைஇதுகுறித்து, சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த சூர்யாதேவி, சமூக வலைதளத்தில் அவதுாறாக பேசினார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போரூர் காவல் நிலையத்தில், இம்மாதம், 7ம் தேதி, வனிதா புகார் அளித்தார்.

இதற்கிடையே, சூர்யாதேவி கஞ்சா வியாபாரம் செய்வதாக, வனிதா பேட்டி அளித்தார். வனிதா மீது நடவடிக்கை கோரி, வடபழநி மகளிர் காவல் நிலையத்தில், இம்மாதம், 16ம் தேதி, சூர்யாதேவியும் புகார் அளித்தார்.உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, இரண்டு புகார்களையும், வடபழநி மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, சூர்யாதேவியை போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூர்யா தேவி, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.புகார்இந்நிலையில், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதுாறு கருத்துக்கள் பரப்பி வருவதாக, நடிகை கஸ்துாரி, லட்சுமி ராமகிருஷ்ணன், நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் மீது, வனிதா, 'ஆன்லைன்' வாயிலாக, வடபழநி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போஸ்டர் செய்தி/'இனி அமைதி மட்டுமே!'நடிகை வனிதா வெளியிட்டுள்ள அறிக்கை: எந்த காரணமும் இல்லாமல், மனிதநேயமின்றி, என்னை தொடர்ந்து அவமானப்படுத்தி, சூர்யாதேவி மனதால் துன்புறுத்தினார். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது குழந்தைகளின் நலனுக்காக, அவரை சிறையில் அடைக்க விரும்பவில்லை., அவரின் ஜாமினை நான் எதிர்க்கவில்லை.இந்த விஷயம் தொடர்பாக, இனி நான் எந்த பேட்டியும், விளக்கமும் கொடுத்து, என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. விவாகரத்து பிரச்னையை, நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பணம், புகழ் மற்றும் விளம்பரம் தேட சிலர் முற்படுகின்றனர்.

நாங்கள் அதைப்பற்றி கவலைப்படப் போவது இல்லை.எங்களின் உண்மையை யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லை. கடவுள் ஒருவருக்கு மட்டுமே பயப்படுவோம். குறைகுடம் தான் சத்தம் எழுப்பும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்படாதவர்கள் எல்லாம் பேசுகின்றனர்; அதை காதில் வாங்க போவதில்லை. நாங்கள் அமைதியாக இருப்போம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
25-ஜூலை-202018:47:10 IST Report Abuse
Gnanam உண்மையை எடுத்துரைத்தால் அவதூறு என்று மிரட்டுவதும் குற்றமே. வீணாக நடவடிக்கை எடுத்து பெயரை கெடுக்கவேண்டாம். மவுனம் காப்பது நல்லது.
Rate this:
Cancel
24-ஜூலை-202009:25:07 IST Report Abuse
பேசும் தமிழன் முதலில் திருட்டு கல்யாணம் செய்த உன்னை கைது செய்ய வேண்டும் ......சமூகத்தை சீரழிக்கும் உனக்கு பாதுகாப்பும் அதை தட்டி கேட்பவர்களை கைதும் செய்கிறது காவல் துறை .... நாடு விளங்கிடும்
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
24-ஜூலை-202007:59:29 IST Report Abuse
நிலா லட்சுமி ராமகிருஷ்ணனை கஸ்தூரியைரவிந்தரை நாஞ்சில் விஜயனை நீ அவதூறாக அபாசமாக பேசினாய் வனிதா உன்னை எப்போது காவல்துறை கைது செய்யும்? சட்டப்படி விவாகரத்து வாங்கி நீ திருமணம் செய்திருந்தால் யாருமே உன்னை விமர்சனம் செய்யமாட்டார்கள் உன் திருமணமே இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் திருமணம் ஆன பெண் ஆண் இனி வருங்காலத்தில் யார் வேண்டுமானாலும் யாரையும் திருமணம் செய்யலாம் என்ற நிலைக்கு போய்விடும் சட்டத்தை கடுமையாக்கவும் விவாகரத்து பண்ணாமல் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு இது முன்னுதாரணமாக அமையும் இந்திய கலாச்சாரம் சீரழிவை சந்திக்கும் உடனே வனிதா திருமணத்தை தடைசெய்ய வேண்டும் அரசாங்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X