பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் உச்சம் தொடும் கொரோனா ; நேற்று ஒரே நாளில், 6,472 பேருக்கு தொற்று

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், கொரோனா தொற்று பரிசோதனை அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதிப்பு தினமும் உச்சத்தை எட்டி வருகிறது.

நேற்று ஒரே நாளில், 6,472 பேருக்கு தொற்று உறுதியானது; 88 பேர் .இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 113 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அந்த ஆய்வகங்களில், நேற்று மட்டும், 62 ஆயிரத்து, 112 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 6,472 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில், 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டில், 375; கோவையில், 238; காஞ்சிபுரத்தில், 330; மதுரையில், 274; ராணிப்பேட்டையில், 214; திருவள்ளூரில், 416; துாத்துக்குடியில், 415; திருநெல்வேலியில், 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தேனியில், 188; திருவண்ணாமலையில், 193; திருச்சியில், 190; விருதுநகரில், 480 மற்றும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த, 49 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை, மாநிலம் முழுதும், 21.57 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில், ஒரு லட்சத்து, 92 ஆயிரத்து, 964 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதன்படி, தொற்று பாதிப்பு ஓரிரு நாளில், இரண்டு லட்சத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதிகபட்சமாக, சென்னையில், 90 ஆயிரத்து, 900; செங்கல்பட்டில், 10 ஆயிரத்து, 888; காஞ்சிபுரத்தில், 6,010; மதுரையில், 8,984; திருவள்ளூரில், 10 ஆயிரத்து, 627 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மகிழ்ச்சி தரும் வகையில், நேற்று ஒரே நாளில், 5,210 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து, ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 793 பேர் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது, 52 ஆயிரத்து, 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சில தினங்களில் இறந்தவர்களில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 24 வயது வாலிபர், சென்னையைச் சேர்ந்த, 26 வயது வாலிபர் உட்பட, 88 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், பெரிய அளவிலான பிற நோய் பாதிப்புகள் இல்லாத, 11 பேர் இறந்துள்ளனர். இதுவரை, கொரோனா பாதிப்பால், 3,232 பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில், 1,947; செங்கல்பட்டில், 214; மதுரையில், 183; திருவள்ளூரில், 188 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்புஅரியலுார் 759 598 3செங்கல்பட்டு 10,888 8,006 214சென்னை 90,900 75,384 1,947கோவை 2,777 1,479 28கடலுார் 2,070 1,496 21தர்மபுரி 505 246 2திண்டுக்கல் 1,930 971 28ஈரோடு 539 396 8கள்ளக்குறிச்சி 2,651 1,903 16காஞ்சிபுரம் 6,010 3,282 80கன்னியாகுமரி 2,858 976 22கரூர் 323 186 9கிருஷ்ணகிரி 551 283 13மதுரை 8,984 5,965 183நாகை 484 288 1நாமக்கல் 432 215 3நீலகிரி 587 371 2பெரம்பலுார் 255 197 3புதுக்கோட்டை 1,299 637 17ராமநாதபுரம் 2,792 1,976 53ராணிப்பேட்டை 3,001 1,520 21சேலம் 2,609 1,874 20சிவகங்கை 1,824 872 31தென்காசி 1,412 450 7தஞ்சாவூர் 1,542 686 17தேனி 3,087 1,625 41திருப்பத்துார் 728 465 6திருவள்ளூர் 10,627 6,547 188திருவண்ணாமலை 4,637 2,575 42திருவாரூர் 1,061 705 1துாத்துக்குடி 4,656 2,158 26திருநெல்வேலி 3,219 1,886 15திருப்பூர் 600 300 6திருச்சி 2,872 1,477 50வேலுார் 4,472 3,123 39விழுப்புரம் 2,613 1,832 31விருதுநகர் 4,767 2,493 37வெளிநாட்டில் இருந்து வந்தோர் 751 533 1உள்நாட்டு விமான பயணியர் 468 405 0ரயிலில் பயணியர் 424 412 0மொத்தம் 1,92,964 1,36,793 3,232/

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X