பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு மாதத்திற்கான, 'இ - பாஸ்'

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில் இருந்து, ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்வோருக்கு, ஒரு மாதத்திற்கான அனுமதி சீட்டு வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்; அவர்கள் தினமும், தமிழகத்தில் இருந்து, ஆந்திரா சென்று வருகின்றனர்.எனவே, அவர்களுக்கு தினசரி, 'இ - பாஸ்' வழங்காமல், ஒரு மாதத்திற்கு, இ - பாஸ் வழங்கும்படி, தொழிற்சாலை நிர்வாகங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதை ஏற்று, தொழிற்சாலைகள் சார்பில் விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கான, இ - பாஸ் வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.ஆனால், தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது;

தொழிற்சாலை நிர்வாகம் விண்ணப்பிக்க வேண்டும்; அவர்களை அழைத்து வர, நிர்வாகமே வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இரு சக்கர வாகனங்களுக்கு, குறைந்த அளவே அனுமதி அளிக்கப்படும்.அதேபோல், தொழிற்சாலை மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தினசரி ஒரு மாவட்டத்தில் இருந்து, அடுத்த மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்ல, மாதாந்திர, இ - பாஸ் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்படும்.'மாதாந்திர, இ - பாஸ் பெறுவோர், ஒரு மாதம் முடிந்ததும், அதை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X