அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்:

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை : திரைப்படத் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்; முன்னாள் எம்.பி.,யும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவருமான, அம்பேத்கர் ராஜன்; விடுதலை சிறுத்தைகள் கட்சியின், சென்னை கோட்ட பொறுப்பாளர் கபிலன் ஆகியோர் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தனர்.

அருந்ததியர் மக்கள் கட்சி மாநில தலைவர் கேசவராஜ்; அண்ணாதுரை உறவினரான அருணா; அ.ம.மு.க., தொழிற்சங்கத் தலைவர் சக்திவேல் உட்பட பலரும் நேற்று, கட்சித் தலைவர் முருகன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.'வெற்றிவேல் முருகா' என்ற, 'மொபைல் போன் காலர் டியூன்' வெளியிடப்பட்டது.பின், முருகன் அளித்த பேட்டி:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு, என்ன செய்வது என்று தெரியவில்லை. கொரோனா காலத்தில், தமிழகத்திற்கு மட்டும், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதை மறைத்து விட்டு, அவர் இஷ்டத்திற்கு, மத்திய அரசை குற்றம் சொல்கிறார்.

ஸ்டாலின், சமூக நீதி குறித்து பேசுகிறார். அவர் கட்சி எம்.பி.,க்கள், தலைமை செயலரை சந்தித்துவிட்டு, 'நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா...' என, கேட்டனர்.அதை, ஸ்டாலின் கண்டிக்கவில்லை.அவரது கட்சி நிர்வாகி, ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள், நீதிபதிகளாக உயர்ந்ததை, கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார். இது குறித்தும், ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.சமூக நீதி குறித்து பேச, தி.மு.க.,விற்கு எவ்வித அருகதையும் கிடையாது. அதிக பட்டியலின எம்.பி.,க்கள் உள்ள கட்சியாக, பா.ஜ., உள்ளது.

தமிழர்கள் வீடுகளில், தினமும் காலையில் ஒலிப்பது கந்த சஷ்டி கவசம். அதை கருப்பர் கூட்டம் என்ற சின்ன கூட்டம், ஆபாசமாக பேசியது.அதை இன்று வரை, யாரும் கண்டிக்கவில்லை. நடிகர்கள் சரத்குமார், ரஜினி ஆகியோர், கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகள் கண்டனம் தெரிவிக்க தயங்கின. ஸ்டாலின், இன்று வரை கண்டனம் தெரிவிக்கவில்லை. கருப்பர் கூட்டத்திற்கும், ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்க வேண்டும்.கருப்பர் கூட்டத்திற்கு பின்புலமாக இல்லை என்பதை, மக்களிடம் அவர் விளக்க வேண்டும். கருப்பர் கூட்டம் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த சேனலை முடக்க வேண்டும்.'வீடியோ' வெளியிட்டவர்களை, குண்டர் சட்டத்தில், கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு பின்புலமாக இருப்போர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
24-ஜூலை-202017:23:29 IST Report Abuse
RajanRajan இப்படியே போனால் மொத்த சுடலை குடும்ப கட்சி கூடாரமும் காலியாகிடும் போல தெரியுதே. உம் காவி கட்டி கந்த சஷ்டி கவசம் பாடி தான் கட்சியை காப்பாத்தணும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
24-ஜூலை-202017:21:03 IST Report Abuse
RajanRajan சுடலைக்கு புடிச்ச கானம் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ........ அப்புறம் கருப்பை எப்படி கண்டிப்பன்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூலை-202010:26:19 IST Report Abuse
Bhaskaran சேர்ந்தவர்கள் ஒவொருவரும் பல லட்சம் வாக்குகளை காவிக்கு சேர்த்துவிடுவார்களா அடப்போங்கப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X