சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

முக கவசத்துடன் கந்தர் சஷ்டி கவசத்தையும் வழங்குங்கள்!காமாட்சிபுரம் ஆதினம் அறிவுரை

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

கோவை:''பொதுமக்களுக்கு முக கவசத்தோடு கந்தர் சஷ்டி கவசத்தையும், முருக பக்தர்கள் வழங்க வேண்டும்,'' என, காமாட்சிபுரம் ஆதினம் தெரிவித்தார்.கோவை, காமாட்சிபுரம் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:''இந்து தர்மம் காலத்தால் தொண்மையானது. அதில், முருக வழிபாடு மிக முக்கியமானது.



latest tamil news




மலேசியா, இலங்கை, பர்மா மற்றும் மேலை நாடுகளில் பல கோவில்களில் முருகன் சிலைக்கு பதிலாக வேல்தான் வைத்து பூஜை செய்யப்படுகிறது. முருகனின் சிறப்பை பல அடியார்கள், புலவர்கள் பாடியுள்ளனர்.கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் அருளப்பட்டது. கவசம் என்பது உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் காக்க கடவுளை பிரார்த்திப்பதாகும்.


latest tamil news



கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்துவதை, காவடிக்குழு பக்தர்கள், இனி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆக.,9ம் தேதி சஷ்டி அன்று முருக பக்தர்கள், காவடிக்குழுவினர் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசத்தோடு, கந்தர்சஷ்டி கவசத்தையும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும்.அதேபோல், பங்குனி உத்திரம், தை பூசத்துக்கு திடும்பு இசை வைத்திருப்பவர்கள் சஷ்டி அன்றும் இசை வாசித்து முருகன் அருளால் தீயவர்களுக்கு நல்ல புத்தி வர பிரார்த்தனை செய்வோம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
24-ஜூலை-202019:13:06 IST Report Abuse
samvijayv இந்து மதம் 'நாகரிகம்', தெரிந்த மதம் ஏன் என்றால் இப்பொது உள்ள சட்டத்திற்கும் கட்டுப்படுவதால்.
Rate this:
Cancel
Aaaaa - Bbbbbb,இந்தியா
24-ஜூலை-202016:03:14 IST Report Abuse
Aaaaa புதுசா ஒரு ஆதீனமா? நாட்டில் இப்படி எத்தனை ஆதீனங்கள்?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-202014:40:29 IST Report Abuse
Rasheel பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் உண்மை பொய் என்று சொல்ல நாம் யார்? சில சம்பவங்களில் கவிஞன் கற்பனைகள் இயல்பு. இது எல்லா மதங்களிலும் பரவி கிடக்கிறது. ஆனால் அவை பொய் என்று சொல்ல நீ அப்போது இருந்தீர்களா? இன்னும் பல கேவலமா கதைகள் அந்த மதத்தில் உள்ளன. இதை விட கேவலமான பல தமிழ் திராவிட உண்மை கதைகள், இந்த நூறாண்டில் நடந்து உள்ளது. அதையும் படித்து கருத்து கூறவும்.
Rate this:
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
24-ஜூலை-202015:01:12 IST Report Abuse
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்)ஹிந்துக்களை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X