அரசு மருத்துவமனை இல்லை: மூணாறு மக்கள் தவிப்பு| Dinamalar

அரசு மருத்துவமனை இல்லை: மூணாறு மக்கள் தவிப்பு

Added : ஜூலை 24, 2020
Share
 அரசு மருத்துவமனை இல்லை: மூணாறு மக்கள் தவிப்பு

மூணாறு:மூணாறில் அரசு மருத்துவமனை இல்லாததால் சிகிச்சைக்கு டாடா மருத்துவமனையை நம்பி அனைத்து தரப்பினரும் உள்ளனர். அங்கு கே.டி.எச்.பி. கம்பெனியில் வேலை செய்யும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இலவசமாகவும், பிறர் கட்டணம் செலுத்தியும் சிகிச்சை பெற்று வந்தனர்.

மருத்துவமனையில் டாக்டர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா உறுதியானாதால் ஜூலை 18 ல் மருத்துவமனை மூடப்பட்டது. காய்ச்சல் உள்பட சில நோய்களுக்கு எஸ்டேட்டில் உள்ள சிறிய மருத்துவமனைகளில் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மகப்பேறு, பிறநோய்களுக்கு சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சை பெற அடிமாலி தாலுகா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.மூணாறு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதால், நகர் உட்பட எஸ்டேட்டில் இருந்து செல்லும் நோயாளிகளை தாலுகா மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை. அதனால் மூணாறு வசிக்கும் தொழிலாளர்கள் பொதுமக்கள் சிகிச்சை வசதி இன்றி தவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X