சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்: தேனி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

இருளில் முழ்கிய மலை கிராமங்கள்

போடி: - குரங்கணி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கனமழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.இதனால் குரங்கணி, கொட்டகுடி, நரிப்பட்டி, முட்டம், முதுவாக்குடி மலைக்கிராமங்களில் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். நேற்று மின்வாரிய அதிகாரிகள் சென்று மின் இணைப்புகள் சீரமைத்து பகல் 12:00 மணிக்கு மின் சப்ளை மீண்டும் துவங்கியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மகனால் தந்தை மாயம்

கூடலுார்: இங்கு பெத்தனன் 47. இவரது மனைவி ஆனந்தி 40. கூலி வேலை செய்து வருகின்றனர். மகன் பிரேம் 20, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ் ஜூலை 16 ல் தந்தை வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு வாரமாக பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கூடலுார் போலீசார் தேடி வருகின்றனர்.-

பைக் மோதல் மூவர் காயம்

கூடலுார்: - கூடலுாரைச் சேர்ந்தவர் சுரேஷ் 38. இவர் தனது நண்பர் விஜயகுமாருடன் டூ வீலரில் கம்பம் நோக்கி சென்றார். அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே இதே ஊரைச் சேர்ந்த ஜெயவீரவிக்னேஷ் 20, வந்த டூ வீலர் மீது மோதியது. மூவரும் ஹெல்மெட் அணியவில்லை. காயமடைந்த மூவரும் தேனி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். கூடலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஐ.ஜி. வீட்டில் திருடியவருக்கு குண்டாஸ்

சின்னமனுார்: குச்சனுாரில் வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜ் பூர்வீக வீடு உள்ளது. அவரது அண்ணன் கோட்டைச்சாமி தங்கியுள்ளார். கடந்த மாதம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 10 பவுன் தங்க நகை திருடுபோனது. இதில் ஈடுபட்ட காமாட்சிபுரம் ரமேஷை 29, கைது செய்து போலீசார் நகையை மீட்டனர். தொடர்திருட்டில் ஈடுபட்ட ரமேஷை குண்டாசில் கைது செய்தனர்.

கொரோனாவில் டாக்டர் பலி

கம்பம்: தனியார் மருத்துவமனையை சேர்ந்த 47 வயது டாக்டர், கொரோனவால் பாதித்து ஜூலை 17 ல் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியான முதல் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X