பெரியவாரை எஸ்டேட் புதிய பாலம் பயன்பாட்டில் சிக்கல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 பெரியவாரை எஸ்டேட் புதிய பாலம் பயன்பாட்டில் சிக்கல்

மூணாறு:மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் பகுதியில் புதிய பாலம் பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் எற்பட்டுள்ளது.

மூணாறு அருகே பெரியவாரை எஸ்டேட் பகுதியில் பழமையான கான்கிரீட் பாலம் 2018 பெய்த கனமழையில் சேதமடைந்து மூணாறு- - உடுமலைபேட்டை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அங்கு கன்னியாற்றின் குறுக்கே குழாய்கள் பதித்து மாற்றுப் பாதையில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. சேதமடைந்த கான்கிரீட் பாலம் அகற்றி, அங்கு ரூ.4.30 கோடியில் புதிய பாலம் பணி 2019 ஜூனில் துவங்கி, இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.

சிக்கல்: புதிய பாலத்தின் அருகே ரோடு கடந்து செல்வதற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்றுவதற்கு தனியார் தேயிலை கம்பெனி தயாரில்லை. அகற்ற வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க நிபந்தனை விதிப்பதால் புதிய பாலம் பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X