தமிழ்நாடு

அதிகரிப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

தேனி: மாவட்டத்தில் கொேரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


மாவட்டத்தில் நேற்று வரை 3,087 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1625 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1421 பேர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின் படி 41 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் நகராட்சிகள், பேரூராட்சிகள், உள்ளாட்சிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை, நிபந்தனைகளுடன் தளர்வு என வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் நோயின் தீவிரம் புரியாமல் அலட்சியமாக சமூக இடை வெளியின்றி சுற்றி வருகின்றனர். தேனியில் நேற்று அனைத்து ரோடுகளிலும் கூட்டம் அலைமோதியது. பலர் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் செயல்பட்டனர். தேனி அன்னஞ்சி விலக்கு, நேரு சிலை பகுதியில் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். அங்கு எவ்வித கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பது இல்லை.

வாகன போக்குவரத்துகளை வேடிக்கை பார்க்கும் நிலைதான் நீடிக்கிறது.தேவாரத்தில் மூன்று நாட்களாக இரட்டை இலக்க எண்ணில் பாதிப்பு அதிகரித்துள்ளது. தேனி நகர், ஒன்றியத்தில் நேற்று முன்தினம் 33 பேர், நேற்று 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை தான் பிற நகராட்சிகள், உள்ளாட்சிகளில் ஏற்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் செல்வது, சமூக இடைவெளியின்றி நடமாடுவது இன்னும் தொடர்கிறது. போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தி, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X