பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் நலம் 'கோவிட்கேர்' மையம் துவக்கம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாகிகிறது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், 'கோவிட் கேர்' மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயாளிகள் அதிகரிக்கும் நிலையில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தொற்று உறுதியான மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு தேனி நலம் மருத்துவமனையில் நலம் 'கோவிட் கேர்' மையம் துவக்கப்பட்டுள்ளது.

இங்கு 24 மணி நேரம் டாக்டர், நர்சிங் சேவை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்ககும் உணவு முறையால் பாதிக்கப்பட்டோர் குணமாக்கப்பட்டு வருகின்றனர். நுரையீரல், மனோதத்துவ நிபுணர்கள், யோகா, ஆம்புலன்ஸ் வசதியுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணொளி மூலம் மருத்துவ, உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 88700 07450 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மருத்துவ மேலாளர் டாக்டர் முகமது பாசித் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X