பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த குறைபாடுள்ள குழந்தையை கொரோனா தாக்குமா

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:'ரத்த குறைபாடுள்ள குழந்தைகளிடம் கொரோனா தாக்கம் அதிகம் இருக்கும்' என, திண்டுக்கல் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியது: ரத்தவியல் குறைபாடு உள்ள குழந்தைகளை கொரோனா எளிதில் தாக்கும். அதனால் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். 'தலசீமியா' எனும் மரபணு சார்பான நோய்க்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரியில் ரத்தம் மாற்றம் செய்வது அவசியம்.

இக்குழந்தைகளுக்கு பருப்பு, பால், வேக வைத்த முட்டை, மீன், சத்துமாவு கஞ்சி வழங்கலாம். சமைக்கப்படாத உணவு (சாலட்) கொடுக்க கூடாது.தோலை தனியாக உரிக்க முடிந்த பழங்கள் மட்டுமே கொடுக்க வேண்டும்.முதிர் வயதுள்ளோர், இதர நோயாளிகள் சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் வரக்கூடாது.

மாதம் ஒரு முறை 'சி.பி.சி' என்ற ரத்த பரிசோதனை செய்து, அந்த அறிக்கையை 91766 33531 எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டும்.முதல் நான்கு கால கட்டத்தில் தேவையான சிகிச்சைகள் பெற 108, 102 மூலம் அரசு மருத்துவமனைக்கு வரலாம்.

ஹீமாபிலியா எனும் நோய் உள்ளவர்களுக்கு ரத்தக் கசிவு, மூட்டு வீக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். 'பேக்டர் 8' எனும் மருந்து மூலம் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை அணுகலாம். இதற்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் மதுரை, தேனியில் அமைக்கப்பட்டுள்ளது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X