பொது செய்தி

இந்தியா

மனிதர்களிடம் தடுப்பு மருந்து பரிசோதனை டில்லி, 'எய்ம்சில்' நாளை துவக்கம்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Covaxin, AIIMS Delhi, coronavirus vaccine, covid 19, coronavirus, மனிதர்களிடம் தடுப்பு மருந்து பரிசோதனை டில்லி, 'எய்ம்சில்' நாளை துவக்கம்


புதுடில்லி :உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள, 'கோவாக்சின்' எனப்படும், கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், நாளை துவங்குகிறது.கொரோனா தொற்றுக்கு, தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் பணியில், உலகம் முழுவதும், பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, 'பாரத் பயோ டெக்' நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது.இந்த மருந்தை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதனை செய்யும் முதல் கட்ட பணிக்கு, நாட்டின் 12 மருத்துவ நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




ஹரியானாவின், ரோடக் மாவட்டத்தில் உள்ள, முதுநிலை மருத்துவ கல்வி நிறுவனம் மற்றும் பீகாரின், பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றில், ஏற்கனவே இந்த பரிசோதனை துவங்கி விட்டது.டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும், பரிசோதனைக்கான அனுமதி கிடைப்பதில், காலதாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது நெறிமுறைகள் கமிட்டி அனுமதி வழங்கியுள்ள நிலையில், நாளை முதல், பரிசோதனை கள் துவங்க உள்ளன.முதற்கட்டமாக, 10 பேர்களிடம், கோவாக்சின் பரிசோதனை, நாளை நடைபெற உள்ளது. மேலும், பல தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த பரிசோதனை தொடரும் என, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.IYYAPPAN - Kanyakumari District,இந்தியா
24-ஜூலை-202008:19:56 IST Report Abuse
C.IYYAPPAN வரவேற்போம். வெற்றி பெற வாழ்த்துவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X