இணைப்பு ரோடு புதுப்பிக்கப்படுமா| Dinamalar

இணைப்பு ரோடு புதுப்பிக்கப்படுமா

Added : ஜூலை 24, 2020
Share

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் - மதுரை ரோட்டை இணைக்கும் 1.6 கி.மீ., க்கு இணைப்பு ரோடு புதுப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகின்றன.

தரம் குறைவாக புதுப்பிக்கப்பட்டதால் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. பாலத்தின் அருகில் பள்ளங்கள் உருவாகி வாகனங்கள் தடுமாறுகின்றன. இந்த ரோட்டை புதுப்பித்தால் மதுரை ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் வத்தலக்குண்டு நகருக்குள் செல்லாமல் பைபாஸ் ரோட்டை சுலபமாக அடைய முடியும்.

மேலும் வத்தலக்குண்டு நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த ரோடு ஒன்றிய நிர்வாகத்தில் உள்ளதால் அதிக செலவில் ரோட்டை புதுப்பிக்க சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதனை நெடுஞ்சாலை துறைக்கு மாற்றினால் தரமான ரோடு அமையும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X