நான்கு வழிச்சாலையோர பூங்கா அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு வழிச்சாலையோர பூங்கா அமைப்பு

Added : ஜூலை 24, 2020
Share
 நான்கு வழிச்சாலையோர பூங்கா அமைப்பு

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம்-தாராபுரம் நான்கு வழிச்சாலையில் சின்னையக்கவுண்டன்வலசு அருகே பயணிகள் இளைப்பாற சாலை ஓர பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.
அவிநாசிபாளையத்தில் இருந்து மெட்டூர் வரை உள்ள ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.இந்த வழத்தடத்தில் கார்கள், சுற்றுலா வாகனங்களில் செல்லும் பயணிகள் இளைப்பாற அம்பிளிக்கைக்கும் சின்னையகவுண்டன்வலசிற்கும் இடையே உள்ள குளத்துக்கரையில் சாலையோர பூங்கா நிறுவப்படுகிறது.

இங்கு பயணிகள் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குளக்கரையை சுற்றி மரக்கன்றுகள் நடும் பணியும் நடக்கிறது. பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளது. இதனால் நெடுந்துாரத்தில் இருந்து வரும் பயணிகள் இயற்கை சூழலில் இளைப்பாறி செல்லும் வசதி ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X