பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...திண்டுக்கல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

தடுப்புவேலி அமையுமா

அய்யலுார்: இங்கிருந்து வைரபிள்ளைப்பட்டி வழியே குருந்தம்பட்டி ரோட்டையொட்டி திம்மினிக்குளத்தின் நீர் வரத்து வாய்க்கால் ஓடை உள்ளது. இவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த ரோட்டில் குறுகலான இடங்களில் ஓடையையொட்டி தடுப்பு வேலி அமைக்க, குளத்திற்கான நீர்வரத்து பாதிக்காத வகையில் ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல்: மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி அழகர்சாமி 55. ஜூலை 20 ம் தேதி காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா பரிசோதனைக்கு தனிமைப்படுத்தப்பட்டார். அவர் கொரோனா அச்சத்தில் நேற்று காலை மருத்துவமனையில் வெளியேறி, திருச்சி ரோட்டில் உள்ள டிரான்பார்மரில் ஏறி தற்கொலை செய்தார்.

ஆடு, மாடுக்கு வெட்டு

குஜிலியம்பாறை: வடகம்பாடி விவசாயி சுப்பிரமணி 55. நேற்று முன்தினம் இரவு ஆடு, மாடுகளை தோட்டத்தில் கட்டி வைத்து, உறவினரான ரமேஷை காவலுக்கு விட்டு சென்றார். நேற்று காலையில் இரண்டு ஆடுகளின் நாக்கு, மூக்கு பகுதி அறுக்கப்பட்டு இருந்தது. ஒரு ஆடு இறந்தது. பசு மாடு, நாயின் கால்கள் வெட்டப்பட்டு இருந்ததை பார்த்து, சுப்பிரமணி அதிர்ச்சியடைந்தார். ரமேஷையும் காணவில்லை. அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

பணியாளர்களுக்கு யோகா பயிற்சி

திண்டுக்கல்: மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பு பணியில் போலீசாரும் ஈடுபடுகின்றனர். டி.ஐ.ஜி., முத்துச்சாமி ஏற்பாட்டில், அவர்களின் மன அழுத்தத்தை போக்க, யோகா, மூச்சுப்பயிற்சி வாரம் ஒருமுறை அளிக்கப்படுகிறது. இதே போல், திண்டுக்கல், தேனி மாவட்ட அமைச்சு பணியாளர்களுக்கும் புதன்கிழமை மாலை 4:45 முதல் 5:45 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மகளிர் சங்க ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: ஜனநாயக மகளிர் சங்க மாவட்ட செயலாளர் ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில்,கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கவும், பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் வலியுறுத்தினர். இதே போல், ரெட்டியார்சத்திரம், சின்னாளபட்டி உட்பட 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நுாதன போராட்டம்

திண்டுக்கல்: மாநகராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனியில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பல ஆண்டுகளாக சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து மாநகராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், நேற்று இப்பகுதி மக்கள் சாக்கடை நீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வி அலுவலகம் திறப்பு

குஜிலியம்பாறை: இங்குள்ள வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் அந்த ஊழியருக்கு தொற்று இல்லை என தெரிந்ததும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நேற்று மீண்டு அலுவலகம் திறக்கப்பட்டது. அறிகுறி தென்பட்ட ஊழியர் விடுப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூவர் கைது

பழநி: கரிக்காரன்புதுார் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக மோகன் 45, மலைராஜா 43 ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர். மண் அள்ள பயன்படுத்திய இயந்திரம், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இதே போல், பழநி ஏ.சி., மடம் அருகே ரோந்து சென்ற அடிவாரம் போலீசார், காளிதாஸ் 30, கைது செய்து, 1100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X