நத்தத்தில் துடைப்பம் வியாபாரம் பாதிப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 நத்தத்தில்  துடைப்பம்  வியாபாரம் பாதிப்பு

நத்தம்:நத்தம், சாணார்பட்டியில் தென்னை அதிகம் சாகுபடியாகிறது. இதனால் அதன் சார்பு தொழிலான துடைப்பம் உற்பத்தியும் அதிகம் நடக்கிறது.

அம்மாபட்டியில் பத்துக்கும் மேற்பட்ட கூடங்கள் துடைப்பம் உற்பத்திக்காக செயல்பட்டுகின்றன. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. கொரோனா ஊரடங்கால் இத்தொழில் முற்றிலும் முடங்கிப் போனது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த 4 மாதத்தில் 500 டன் துடைப்பம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

வியாபாரி ஒருவர் கூறுகையில்,'ஊரடங்கிற்கு முன்பு அனுப்பப்பட்ட துடைப்பங்களுக்கு இதுவரை பணம் பெறவில்லை. நிலைமை சீராகும் என நினைத்து உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளும் தேங்கியுள்ளன. வேலையாட்களுக்கு கடன் வாங்கி கூலி கொடுக்கும் நிலை உள்ளது', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X