ஒட்டு ரகத்தால் ஆரஞ்சு சாகுபடி பாதிப்பு: தோட்டக்கலைத் துறை விழிக்குமா

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 ஒட்டு ரகத்தால் ஆரஞ்சு சாகுபடி பாதிப்பு: தோட்டக்கலைத் துறை விழிக்குமா

தாண்டிக்குடி:தாண்டிக்குடி மலைப்பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள ஆரஞ்சு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் ஆரஞ்சு சாகுபடி செய்யப்பட்டது. இவ்வகை ஆரஞ்சை கம்லா, கோடை, கொடை ஆரஞ்சு என அழைப்பர். அதிக சுவை, நீர்சத்து நிறைந்த இப்பழத்திற்கு அதிக மவுசு உண்டு. நடவு செய்து 40 ஆண்டுகள் பலன் தரும். காபிக்கு மத்தியில் ஊடுபயிராக நல்ல பலன் தந்தது.

ஒட்டுரகத்தால் பாதிப்பு

நாளடைவில் நாக்பூரிலிருந்து வீரியஒட்டு ரக ஆரஞ்சு கன்றுளைப் பெற்று விவசாயிகள் நடவு செய்தனர். சில ஆண்டுகள் நல்ல மகசூல் கிடைத்ததால், பாரம்பரிய ஆரஞ்சை கவனிக்க தவறினர். ஒட்டு ரகத்தில் இருந்து சாக்கிங் மாத், சாம்பல் நோய், சாறு உறிஞ்சும் பூச்சிகள், மாவு பூச்சி, நுனி கருகல் தாக்குதல், மை நோய் பாதிப்பு தொடங்கி ஆரஞ்சு மரங்கள் மகசூலை இழந்தது.

நோய் தாக்குதலை தோட்டக்கலைத்துறை கண்டுகொள்ளவில்லை.இதனால் தற்போது சில நுாறு ஏக்கரில் ஆரஞ்சு விவசாயம் சுருங்கிவிட்டது. ஆராய்ச்சி நிலையத்தாலும் விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. மீண்டும் ஆரஞ்சு விவசாயம் உயிர்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X