இந்தியா

வி.வி.பி., நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் வெங்கடேசன் எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால், சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும் என, வெங்கடேசன் எம்.எல்.ஏ., கூறினார்.சட்டசபையில் அவர் பேசியதாவது:புதுச்சேரியில் அதிகளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது.எனவே, இங்குள்ளதனியார் மருத்துவக் கல்லுாரிகள்,மருத்துவமனைகளில்கூடுதல் படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால்,இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம், ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கம், லாசுப்பேட்டையில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் போன்றவற்றை தற்காலிக கொரோனா மருத்துவமனைகளாக மாற்ற வேண்டும்.கோவிட் நோயை காரணம் காட்டி, மற்ற நோயாளிகளை அலைக்கழிக்க கூடாது.தட்டாஞ்சாவடி தொகுதியில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர். ஆகவே வி.வி.பி., நகரில் மேலும் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம், குண்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்பெறுவர்.கொரோனா ஊரடங்கினால் பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.இதனை கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டு அடிப்படையில் கூடுதல் நிவாரண தொகையை மாநில அரசு வழங்க வேண்டும்.நோய் தொற்று ஏற்பட்ட பகுதியில் அரசு துறையினர் உடனே தடுப்புகள் அமைக்காததால்,அக்கம்பக்கத்தினர் அச்சப்படுகின்றனர்.எனவே, நோய் தொற்று கண்டறிந்தவுடன, அப்பகுதியில் தடுப்பு அமைக்க உத்தரவிட வேண்டும். தட்டாஞ்சாவடியில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X