சட்டசபையில் உரையாற்ற கவர்னர் ஒப்புக்கொண்டது ஏன்?| Dinamalar

இந்தியா

சட்டசபையில் உரையாற்ற கவர்னர் ஒப்புக்கொண்டது ஏன்?

Added : ஜூலை 24, 2020
Share

புதுச்சேரி; முதல்வரின் அனுபவம், பொறுமை, சட்டத்தை பின்பற்றுதல் போன்றவற்றால் தான், கவர்னர் சட்டசபையில் உரையாற்ற ஒப்புக் கொண்டுள்ளார் என, மாநில காங், தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:பட்ஜெட்டினை எந்த அளவிற்கு தடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கவர்னர் காலதாமதம் செய்தார். அதை மீறி, முதல்வர் தனது திறமையான அனுபவத்தினால் வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. ரொட்டி, பால் திட்டத்தில் காலை சிற்றுண்டி புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜிவ்காந்தி பெயரில் உள்ள ரொட்டி பால் திட்டம் எப்போதும் போல செயல்படும். விரிவாக்க திட்டத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஏழைகளுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு மக்களிடம் வரவேற்பு பெறும். குடிநீர் வரியை ஏழைகளுக்கு ரத்து செய்துள்ளார்.விவசாயிகள், மீனவர்கள் என பெரும்பாலான மக்களை திருப்திபடுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. அருமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள முதல்வர், அதனை நிறைவேற்றவும் போராடிக் கொண்டுள்ளார். முதல்வரின் அனுபவம், பொறுமை, சட்டத்தை பின்பற்றுதல் போன்றவற்றால் தான், சட்டசபையில் உரையாற்ற கவர்னர் ஒப்புக் கொண்டுள்ளார். கவர்னரால் தொல்லைகள் இனி ஏற்படாது என நம்புவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X