இந்தியா

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சமரசம்: முதல்வர் அழைப்பை ஏற்று சபைக்கு திரும்பினர்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; முதல்வரின் அழைப்பை ஏற்று, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று சட்டசபைக்கு திரும்பினர்.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கடந்த 21ம் தேதியன்று வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் சபைக்கு வராமல் புறக்கணித்தனர். இந்நிலையில், சட்டசபை நேற்று கூடியதும், முதல்வர் நாராயணசாமி பேசும்போது, 'இரண்டு நாட்களுக்கு முன், தங்களது தலைவிக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அன்பழகன் முன்வைத்தபோது, சபையில் இல்லாத தலைவர்களை பற்றி பேசியது வருத்தத்துக்குரியது. ஜெ.,வுக்கு சிலை வைக்க வேண்டும் என கேட்பது அவரது உரிமை. ஆனால், சபையில் இல்லாதவர்களை பற்றி விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.ராஜிவ்காந்தி பெயரில் சூடான பால் வழங்கும் திட்டம் நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து செயல்படுத்தப்படும். 'அட்சய பாத்திரா' அமைப்புடன் சேர்ந்து இட்லி, பொங்கல், கிச்சடி போன்றவற்றை வழங்கும் திட்டத்தை கருணாநிதி பெயரில் கொண்டு வந்துள்ளோம்.ராஜிவ்காந்தியால் உருவாக்கப்பட்டவன் நான். அரசியலில் இன்று நான் இருப்பதற்கு அவர் தந்த அங்கீகாரம்தான் காரணம். ராஜிவ்காந்தி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு வந்து, தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்வதுதான் ஜனநாயகம்.தலைவர்களை பற்றி விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். முதல்வராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு நீங்கள் சிலை வைக்கவில்லை. அவரது சமாதிக்குகூட இடம் தராதவர்கள் மற்றவர்களை பேசும்போது, தங்கள் முதுகை திரும்பி பார்க்க வேண்டும். அன்பழகன்: ஜெ.,வுக்கு சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தபோது, ஏற்றுக் கொண்டனர்.அவருக்கு பின் மறைந்த கருணாநிதிக்கு சிலை வைக்க கமிட்டி அமைக்கப்பட்டது. தெருவுக்கு பெயர் வைக்கப்பட்டது. கருணாநிதி பற்றி ஒரு வார்த்தைகூட தவறாக பேசவில்லை. சோனியாவால் துவக்கி வைக்கப்பட்ட திட்டத்தை நிறுத்தியது நியாயமா? என்று கேட்டேன். நான் தவறாக பேசியதை சபை குறிப்பில் இருந்து காட்டினால் ராஜினாமா செய்கிறேன். நீங்கள் ராஜினாமா செய்கிறீர்களா.அமைச்சர் கமலக்கண்ணன்: ஜெ,வுக்கு சிலை வைக்க வேண்டும் என்றுதான் கேட்டார். கருணாநிதி பற்றி அவதுாறாக அவர் பேசவில்லை. தலைவர்களை பற்றி யாரும் அவதுாறாக பேசக் கூடாது.அன்பழகன்: என்னை கண்டித்து சிவா வெளிநடப்பு செய்யவில்லை. அமைச்சர்களை கண்டித்துதான் வெளிநடப்பு செய்தார். தி.மு.க.,வை திருப்திப்படுத்துவதற்காக பேசுகிறார்; அரசியல் செய்கிறார்.கமலக்கண்ணன்:யாராக இருந்தாலும் அரசியல் செய்துதான் ஆக வேண்டும். அரசியல் செய்யாமல் இருக்க முடியாது. அரசியல் செய்தால்தான் எதிர்காலத்தில் நீடிக்க முடியும்.அன்பழகன்: என்ன பற்றி பேசிய வார்த்தைகளை, பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் திரும்ப பெற வேண்டும்.வையாபுரி மணிகண்டன்: யாரை பற்றியும் எங்கள் கட்சி தலைவர் தவறாக பேசவில்லை.அமைச்சர் நமச்சிவாயம்: இது, காங்., - தி.மு.க., கூட்டணி அரசு. எங்கள் அரசு இருக்கும்போது, எங்கள் தலைவர்களை கவுரவப்படுத்துவோம். உங்கள் ஆட்சியில் நீங்கள் செய்து கொள்ளுங்கள்.இந்நிலையில், முதல்வரின் அழைப்பை ஏற்று தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிவா, வெங்கடேசன், கீதா ஆனந்தன் ஆகியோர் சபைக்கு திரும்பினர்.அன்பழகன்: நான் பேசாததை பேசியதாக கூறுகின்றனர். அரசியல் செய்வதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.தொடர்ந்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.சிவா: அன்பழகன் என்ன பேசினார் என்பது சபை பதிவில் உள்ளது. அதை கேட்டால் தெரிந்து விடும் என்று கூற, பிரச்னை முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X