இந்தியா

தொற்று அறிகுறியுள்ள அனைவருக்கும் பரிசோதனை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம், 30 கிலோ அரிசி வழங்க வேண்டும் என சிவா எம்.எல்.ஏ.,வலியுறுத்தியுள்ளார்.கொரோனா பரவல் தடுப்பு விவாதத்தில் சிவா எம்.எல்.ஏ., பேசியதாவது.புதுச்சேரி அரசு ஒரே ஒரு கொரோனா பரிசோதனை இயந்திரம் மட்டுமே வைத்துள்ளது. ஒரு இயந்திரத்தில் 6 மணி நேரத்திற்கு 60 பேருக்குத்தான் பரிசோதனை செய்ய முடியும். இரண்டு ஷிப்ட் இயங்கினால்கூட 200 எண்ணிக்கையை தாண்டவில்லை. எனவே, புதிதாக 4 கொரோனா பரிசோதனை இயந்திரங்களை வாங்க வேண்டும்.ஜிப்மரில் 4 கொரோனா பரிசோதனை இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்களா என தெரியவில்லை. புதுச்சேரி அரசு அனுப்பும் அனைத்து நோயாளிகளுக்கும் அங்கு பரிசோதனை செய்யப்படுவதில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரைக்காலில் உள்ள ஜிப்மர் கிளையிலும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறியுள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவுவதை தடுத்து நிறுத்த முடியும். கொரோனா சிகிச்சைக்கு 10 ஆயிரம் படுக்கை வசதிகளை உடனே ஏற்படுத்த வேண்டும்.இந்திராகாந்தி கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் சிக்கியவர்களை அழைத்து செல்லவும், கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லவும் ஒரே ஆம்புலன்ஸ் பயன்படுத்தி வருகின்றனர், கூடுதலாக இன்னும் 50 ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும். இதற்காக ரூ.1 கோடி நிதி வந்தும் செலவு செய்து வாங்கப்படாமல் உள்ளது. உடனடியாக வாங்க வேண்டும்.வாழ்வாதாரம் இழந்துள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து மக்களிடம் கொரோனா நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது. அந்த நிதி என்ன ஆனது, அதில் இருந்து இந்த செலவுகளை செய்ய வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் பணமும், 30 கிலோ அரிசியும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X