இந்தியா

கொரோனா தொற்று தடுப்பு பணி : எம்.எல்.ஏ., ஆலோசனை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'ஒவ்வொரு அமைச்சருக்கும் 6 சட்டசபை தொகுதிகளை ஒப்படைத்து கொரோனா தடுப்பு பணியை கவனிக்க வேண்டும்' என அன்பழகன் எம்.எல்.ஏ., அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.கொரோனா தடுப்பு விவாதத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ.,பேசியதாவது:ஜிப்மருக்கும், புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறைக்கும் இணக்கமான சூழல் இல்லை. அவரவர் தன்னிச்சையாக செயல்படுவதால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.சுகாதாரம், வருவாய், காவல், உள்ளாட்சி ஆகிய துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு துளிகூட இல்லை. மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கெல்லாம் பரிசோதனையை அந்த இடத்திற்கு சென்று செய்ய வேண்டும்.கொரோனா பரிசோதனைக்கு அதிகப்படியான 'கிட்' வாங்க வேண்டும். மருத்துவர், செவிலியர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் கொரோனா சம்பந்தமான பரிசோதனை மருத்துவமனைகளாக மாற்றப்பட வேண்டும்.இதற்காக கொரோனா தடுப்பு மையம் என்ற பெயரில் இவ்வாண்டு பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு 1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.முதல்வர் நிவாரண நிதி இதுவரை எவ்வளவு வந்துள்ளது, அதில் என்னென்ன செய்கிறீர்கள்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் சிறிய அளவில் நிதியுதவி செய்ய கூடாதா.முதல்வர் நிவாரண நிதியில் இருந்து செலவு செய்ய கவர்னர் தடுக்கிறாரா. அதை தடுக்கும் உரிமை கவர்னர் உள்ளதா. எனது தொகுதியில் பாதிக்கப்பட்ட எந்த வீட்டிற்கும் ஒரு பைசா கூட இதுவரை அரசு செலவு செய்யவில்லை.அமைச்சர்களிடம் முதல்வர் நிவாரண நிதியை பிரித்து கொடுத்து, ஒவ்வொரு அமைச்சருக்கும் 6 சட்டசபை தொகுதியை ஒப்படையுங்கள். அவருடன் மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, செயல்பட விடுங்கள்.தொற்று குணமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். மரணம் அடைந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் வழங்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் 6000 வழங்க வேண்டும். புதுச்சேரியில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஏற்று செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X