இந்தியா

கூடுதல் டாக்டர், செவிலியர் நியமிக்க வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்' என, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., பேசினார்.சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் அவர் பேசியதாவது: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். சம்பளம் வழங்கப்படாததால் நகராட்சி ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு உடனடியாக சம்பளம் தர வேண்டும். கிருமி நாசினி தெளிக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படையான உபகரணங்களை, நகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு வாங்கித் தர வேண்டும்.கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக எம்.எல்.ஏ.,க்கள் கமிட்டி அமைத்து தினசரி ஆய்வு செய்ய வேண்டும். படுக்கைகள், வெண்டிலேட்டர் கருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. தற்காலிக அடிப்படையிலாவது கூடுதல் டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் நன்கொடையாக அளிக்கப்பட்ட சானிடைசர், முக கவசங்களை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படியே வைத்திருந்தால் யாருக்கும் பயனில்லை.கட்டுப்பாட்டு மண்டலங்களில் காய்கறிகள், மளிகை பொருட்களை வழங்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கான தவணைகளை தற்போது வசூலிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம், குணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம், கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். வீடுதோறும் இலவச மாஸ்க் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X