இந்தியா

முதலியார்பேட்டை தொகுதியில் சிறப்பு முகாம்: பாஸ்கர் எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'முதலியார்பேட்டை தொகுதியில் கொரோனா பரிசோதனைக்காக சிறப்பு முகாம் நடத்த வேண்டும்' என, பாஸ்கர் எம்.எல்.ஏ., கூறினார்.சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் அவர் பேசியதாவது:முதலியார்பேட்டை தொகுதியில் மட்டும் 144 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை, 85 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 650 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிப்போருக்கு, முதல்வர் நிவாரண நிதியில் காய்கறிகள், மளிகை வழங்கப்பட்டது.எனது தொகுதியில் 4 மண்டலங்களில் மட்டும் வழங்கிவிட்டு நிறுத்தி விட்டனர். அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் வருவாய், போலீஸ், சுகாதார துறையினரின் கண்காணிப்பு இல்லாமல் உள்ளது.தொற்றை கட்டுப்படுத்த, கூடுதல் ஊழியர்கள், அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை உடனுக்குடன் செய்யப்படுவதில்லை. பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இறந்தவர் உடலுக்கு உடனே இறுதி சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தாமதம் ஏற்பட்டால் அந்த குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள முதலியார்பேட்டை தொகுதியில் சிறப்பு முகாம் நடத்தி, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X