இந்தியா

என்.ஆர்.காங்., பொதுச்செயலருக்கு கொரோனா

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; என.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருக்கு, தொற்று உறுதியாகி உள்ளது.புதுச்சேரி, முதலியார் பேட்டை உழந்தை கீரப்பாளையம் அன்சாரி துரைசாமி நகரில் வசிப்பவர் பாலன், 67; என்.ஆர். காங்., கட்சியின் பொதுச் செயலாளர். கடந்த என்.ஆர்.காங்., ஆட்சியில் நியமன எம்.எல்.ஏ.வாகவும், ஏ.எப்.டி. மில் சேர்மனாவும் பதவி வகித்தார்.இவர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். கொரோனா தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், பரிசோதனை செய்து கொண்டார்.இதன் முடிவு நேற்று வெளியானது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X