இந்தியா

மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி: போலீஸ் விசாரணை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பாகூர்; கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகூர் அடுத்த குருவிநத்தம் கிழக்கு புது நகரை சேர்ந்தவர் சேகர், 40; கூலித் தொழிலாளி. இவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலில் அடிபட்டதால், சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தார். எப்போதாவது சித்தாள் வேலைக்கு செல்வார்.திடீர் குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் சித்தாள் வேலைக்கு சென்ற சேகர் திடீரென மயங்கி விழுந்தார்.உடன், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் உயிரிழந்தார். தகவலறிந்த பாகூர் போலீசார், சேகரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X