இந்தியா

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருவாய்த்துறை மூலம் மீட்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் உணவு, தங்குமிடம் இன்றி தவித்த பீகார் தொழிலாளர்கள் 52 பேரை வருவாய் மற்றும் தொழிலாளர் துறையினர் மீட்டனர்.பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த 52 தொழிலாளர்கள், வேலைக்காக ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும், புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில், கடந்த 7ம் தேதி பணியமர்த்தப்பட்டனர்.ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, அவர்களுக்கு அந்த கம்பெனியில் சரியாக வேலை வழங்க முடியாததால், குறைந்த அளவில் சம்பளம் வழங்கி, வீட்டிற்கு செல்லுமாறு கம்பெனி நிர்வாகம் கடந்த 20ம் தேதி கூறியது.இதனால், உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் பரிதவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர் 52 பேரும் நடைப்பயணமாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.இதுகுறித்து வருவாய் துறைக்கு தகவல் கிடைத்து. கலெக்டர் அருண் அறிவுறுத்தலின்பேரில், சப் கலெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில், தொழிலாளர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் தைலாபுரம் அருகே சென்று கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு, பி.ஆர்.டி.சி. பஸ்களில் அழைத்து வந்தனர்.பின்னர், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், யாருக்கும் தொற்று இல்லை என தெரிய வந்தது. இவர்கள் அனைவரையும் ஓரிரு நாட்களை அரசு மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இதற்கிடையே, சப் கலெக்டர் தமிழ்ச்செல்வன், மீன்வளத் துறை உதவி இயக்குனர் கோவிந்தசாமி, தொழிலாளர் துறை சம்பத்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், மீட்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சாரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனைகள் வழங்கினர்.தொழிலாளர்கள் அனைவரையும் முத்தியால்பேட்டை சோலை நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்க அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, வேறு இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X