இந்தியா

புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சி அமைய இளைஞர்களுக்கு சாமிநாதன் அழைப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'புதுச்சேரியில் பாஜ., ஆட்சி அமைக்க, இளைஞர்கள் கட்சியில் இணைய முன்வர வேண்டும்' என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.புதுச்சேரி மாநில பாஜ., உழவர்கரை மாவட்ட இளைஞரணி தலைவராக ஷாஜஹான், மாநிலத் தலை வர் சாமிநாதன் எம்.எல்.ஏ., ஒப்புதலின்படி, மாநில இளைஞர் அணி தலைவர் கோவேந்தன் கோபதி, மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டார்.முன்னதாக, ஷாஜஹான் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பேசுகையில், மத்தியில் 2வது முறையாக பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. புதுச்சேரியிலும் பா.ஜ., அரசு வரவேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் சட்ட சபை தேர்தலில் பா.ஜ., ஆட்சி அமைக்க, இளைஞர்கள் அதிக அளவில் கட்சியில் இணைய முன்வர வேண்டும்' என அழைப்பு விடுத்தார்.மாநில பொதுச் செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி, பொதுச் செயலாளர் வேல்முருகன், சிவசெந்தில் மற்றும் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், லாஸ்பேட்டை தொகுதி தலைவர் சோமசுந்தரம், நிர்வாகி ராக் பெட்ரிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X