இந்தியா

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சப் கலெக்டர் ஆய்வு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், புதிதாக செயல்படுத்தப்படும் நோயாளர் நல குழுவின் செயல்பாடுகள் குறித்து சப் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.புதுச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க, தேசிய ஊரக நலத் திட்டமான 'ரோகி கல்யாண் சமிதி' திட்டத்தில், தற்போது நோயாளர் நல குழு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.இதில் ஆளுமை குழு, நிர்வாக குழு, கண்காணிப்பு குழு ஆகியவை உள்ளன. இந்த குழுக்கள் மூலம், சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் நிதி பெற்று, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கழிவறையை மேம்படுத்துதல், குடிநீர் வசதி செய்து கொடுத்தல் உள்பட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியும்.நலக்குழுவின் செயல்பாடுகளை, சப் கலெக்டர் சுதாகர் நேற்று ஆய்வு செய்தார். லாஸ்பேட்டை, குயவர்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்த சப் கலெக்டர், நோயாளிகளுக்கு எத்தகைய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது வழியில் ஆக்கிரமிப்பினால் இடையூறு ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக சப் கலெக்டர் கூறினார். கொரோனா தடுப்பு பணியில் வருவாய் துறை, அமைச்சக ஊழியர்கள், நகராட்சி ஊழியர்களுக்கு சப் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X