இந்தியா

போலீஸ்காரருக்கு தொற்று தாசில்தார் அலுவலகம் மூடல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

காரைக்கால்; காரைக்காலில் கலால் துறை போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அலுவலகம் மூடப்பட்டது.காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 145 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சோதனைச் சாவடிகளில் நலவழித் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், காரைக்கால் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கலால் துறை அலுவலகத்தில் பணிபுரியும், வரிச்சிக்குடியை சேர்ந்த போலீஸ்காரர், சமீபத்தில் ஒரு இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பினார். அவருக்கு, உமிழ்நீர் மாதிரி பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதையடுத்து, அவர் பணியாற்றிய தாசில்தார் அலுவலகம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X