இந்தியா

கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி புதுச்சேரியில் பாதிப்பு 2,421 ஆக உயர்வு

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி புதுச்சேரியில் பாதிப்பு 2,421 ஆக உயர்வு

புதுச்சேரி; புதுச்சேரியில் கொரோனாவுக்கு நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் நேற்று 558 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 123 பேருக்கு தொற்று உறுதியானது. அதாவது, பரிசோதனை செய்தவர்களில் 22 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது பெரிய பாதிப்பாகும்.

இதில் 75 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியிலும், 44 பேர் ஜிப்மரிலும், 3 பேர் காரைக்காலிலும், ஒருவர் ஏனாமிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று பாதிப்பால், கூடப்பாக்கத்தை சேர்ந்த 59 வயது நபர், வாணரப்பேட்டையை சேர்ந்த 46 வயது நபர் ஆகிய இருவரும் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.அரசு பொது மருத்துவமனையில் லாஸ்பேட்டையை சேர்ந்த 50 வயது நபர் கடந்த 20ம் தேதி அனுமதிக்கப்பட்டு, 21ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனால் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,421 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,400 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.நேற்று கதிர்காமம் மருத்துவ கல்லுாரியில் 10 பேர், ஜிப்மரில் 2 பேர், கோவிட் சென்டரில் 5 பேர், காரைக்கால்-4 பேர் என மொத்தம் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 505 பேர், ஜிப்மர்-259, கோவிட் கேர் சென்டர்-133, காரைக்கால் -52, ஏனாம்-37 பேர் என மொத்தம் 987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 33,096 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 30,260 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 280 பேர் பரிசோதனை முடிவு வரவேண்டி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X