இந்தியா

கூடுதல் நிவாரணம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மக்களுக்கு...சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி அறிவிப்புபுதுச்சேரி, ஜூலை 24---'கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.700 மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்' என, முதல்வர் நாராயணசாமி கூறினார்.கொரோனா தொற்று பரவலை தடுப்பது மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக சட்டசபையில் விவாதிப்பதற்கு, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன், தி.மு.க., எம்.எல்.ஏ., சிவா ஆகியோர் அறிவிப்பு அளித்திருந்தனர்.கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் நாராயணசாமி விளக்கி கூறினார். தொடர்ந்து நடந்த விவாதத்தில் அமைச்சர்கள், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று, பேசினர்.விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:புதுச்சேரி மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக, மக்களோடு மக்களாக இருந்து இரவு - பகல் பார்க்காமல் பணியாற்றி வருகிறோம். தேசிய அளவில் கொரோனா பாதிப்பால் இறப்பது 2.5 சதவீதமாக உள்ளது. இது, புதுச்சேரியில் 1.4 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு அரிசி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. வேறு எந்த உதவிகளையும் செய்யவில்லை.ரூ. 1 லட்சம் நிவாரணம்கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.19.16 கோடி வந்துள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.500 மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக, கொரோனா நிதியில் இருந்து ஏற்கனவே ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் 10 லட்சம் ரூபாய்க்கு காசோலை இன்று (நேற்று) வழங்கப்பட்டுள்ளது. இனி, கட்டுப்பாட்டு மண்டலங்களில் ரூ.700 மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும். கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.வருவாய் சரிவுபுதுச்சேரி அரசின் வருவாய் 100 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசும் நிதியுதவி தரவில்லை. ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகை ரூ.490 கோடி வரவில்லை. இந்த தொகை வந்த பிறகு, மற்ற நிவாரண உதவிகள் அறிவிக்கப்படும்.கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் 5,000 படுக்கைகள் தேவைப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் ஒத்துழைப்பு சரியாக இல்லை. இது தொடர்ந்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா தொடர்பான பணிகளில் புதுச்சேரி அரசு ஊழியர்கள், அதிகாரிகள் நன்றாக பணியாற்றுகின்றனர். அவர்களை பாராட்ட வேண்டும். மேல்மட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக, கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்து போன்றவற்றை வாங்குவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். கொரோனா விஷயத்தில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முடிவு எடுக்கலாம். அரசுக்கு உதவியாக இருக்க வேண்டியவர்கள், தொல்லை தரும் வேலையை செய்கின்றனர் என அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X