இந்தியா

வழக்கு தொடருவேன் கந்தசாமி அறிவிப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; அமைச்சர்கள் பேசியதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது வழக்கு தொடர உள்ளதாக, அமைச்சர் கந்தசாமி கூறினார்.கொரோனா தொற்று பரவலை தடுப்பது தொடர்பாக, சட்டசபையில் நேற்று விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேசிய அன்பழகன், 'அமைச்சர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா' என கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் கந்தசாமி, 'அறைக்குள் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் பேசியதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது வழக்கு தொடரப் போகிறேன்' என்றார்.அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த அன்பழகன், 'பத்திரிகையாளர்களை மிரட்டக் கூடாது. பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது துாண். செய்தி தவறு என்றால் நீங்கள் மறுப்பு தெரிவிக்கலாம்' என்றார்.அதற்கு அமைச்சர் கந்தசாமி, 'வக்கீல் நோட்டீஸ் தரப் போகிறேன். யார் தகவல் தந்தனர் என பதில் தரட்டும்' என்றார்.முதல்வர் நாராயணசாமி கூறும்போது, 'உண்மையான தகவல்களை பிரசுரிக்கலாம். ஆனால், தவறான தகவல்களை போட்டால் வழக்கு தொடரலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X