இந்தியா

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இன்று (24ம் தேதி) முதல் பள்ளிகளில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் குப்புசாமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் இன்று (24ம் தேதி) முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுக்கூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்ப வாய்ப்பு அளிக்கப்படும்.விடைத்தாள் நகல் பெறு வதற்கு பாடம் ஒன்றுக்கு ரூ. 275, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205ஐ, பள்ளிகளிலேயே பணமாக செலுத்த வேண்டும்.இன்று (24ம் தேதி) முதல் 30ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X