பொது செய்தி

தமிழ்நாடு

கொடை, பழநியில் மழை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
கொடைக்கானல்:கொடைக்கானலில்சில மாதங்களாக வறண்ட வானிலை நீடித்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு தட்டுப்பாடு நிலவியது. வெப்ப சலனம் காரணமாக சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால்அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் குடிநீர் ஆதாரமான மனோரத்தினம் சோலை அணையின் நீர்பிடிப்பில் குறைவான மழையால்நீர்மட்டம்
 கொடை, பழநியில் மழை

கொடைக்கானல்:கொடைக்கானலில்சில மாதங்களாக வறண்ட வானிலை நீடித்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு தட்டுப்பாடு நிலவியது. வெப்ப சலனம் காரணமாக சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால்அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் குடிநீர் ஆதாரமான மனோரத்தினம் சோலை அணையின் நீர்பிடிப்பில் குறைவான மழையால்நீர்மட்டம் உயராத நிலையில், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கவில்லை.இதே போல்,பழநியில் பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலையில் சாரல் மழை பெய்து குளிர்விக்கிறது.

பழநி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தோண்டிய குழிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X