சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவரால் 220 பேருக்கு கொரோனா: 140 பேர் குணமடைந்ததால் நிம்மதி

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
coronavirus, covid 19, coronavirus outbreak, covid 19 tamil nadu, இருவர், கொரோனா, 220 பேர், திருமண நிகழ்ச்சி, எல்லநள்ளி, ஊசி தொழிற்சாலை,

ஊட்டி; மஞ்சூர் அருகே, இருவரால் மட்டும், 220 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மஞ்சூர் அருகே தங்காடு ஓரநள்ளி கிராமத்தில், திருமண நிகழ்ச்சி நடந்தது. விதிகளை மீறி அதிகம் பேர் பங்கேற்றுள்ளனர்.

அதில், பெங்களூரிலிருந்து வந்த இளைஞரால், தொற்று பரவியுள்ளது.நிகழ்ச்சிக்கு பின், காய்ச்சல், சளியால் சிலர் பாதிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டு, தொடர்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தினர். அந்த நிகழ்ச்சியால் மட்டும் இதுவரை, 105 பேருக்கு தொற்று பரவியது.


latest tamil news


அதே போல், எல்லநள்ளி ஊசி தொழிற்சாலையில் மக்கள் தொடர்பு அலுவலரால் தொற்று ஏற்பட்டது. அங்கு பணிபுரியும், 750 ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில். 115 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த இரண்டு அலட்சிய சம்பவத்தால், மொத்தம், 220 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில், 140 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
24-ஜூலை-202015:29:02 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு ஆனா எடியூரப்பா சொல்றது என்னன்னா தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்துதான் கர்நாடகாவில் கொரோனா பரவுதுன்னு
Rate this:
Cancel
R S BALA - Tiruvallur,இந்தியா
24-ஜூலை-202013:22:30 IST Report Abuse
R S BALA இதெற்கெல்லாம் ஒரு தீர்வு ஏதும் இருப்பதாக தெரியவில்லை .... இது என்னடா ரொம்ப நூதன திருட்டா இருக்கு என்று வடிவேல் ஒரு படத்தில் வசனம் வரும் ,அது போல இருக்கு இந்த கொரோனா நோய் ரொம்ப நூதனமா அடுத்தவன் உடம்புக்குள்ள நுழஞ்சிடுது ...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-202012:54:40 IST Report Abuse
Lion Drsekar பாவம் ஒரு புறம் பழி ஒருபுறம் என்பார்கள் அதுபோல் கொரோனா என்று ஆரம்பித்து சிலருக்காக பெயர் மற்றபப்ட்டு தற்போது கோவிட என்று பெயர் மாற்றப்பட்டு விட்டது, அந்த அளவுக்கு இன்று கோயம்பேடு பழியை சுமந்து கொண்டு விட்டது, பாவம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X