பொது செய்தி

இந்தியா

ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: ஏர் இந்தியா விமானிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா விமானிகள் குழு தெரிவித்துள்ளது.



latest tamil news



ஏர் இந்தியா விமானிகள் குழு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை மீட்டு வருவதற்காக மத்திய அரசு வந்தே பாரத்திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 137 நாடுகளில் இருந்து 5,03,990 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களில் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் உறுதி படுத்தப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஏப்.,1 ம் தேதி ஆறுமாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஊதியம் இல்லா விடுப்பு எடுப்பதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஊழியர்களின் சம்பள வெட்டு,ஊதியமின்றி கட்டாய விடுப்பு போன்றவை பேரழிவு தரக்கூடிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தகூடும். நிறுவனத்தின் சிறந்த நலன்களுக்காக சேவை செய்வோம். அதே நேரத்தில் நிதிக்கடன்கள் எங்களின் எதிர்காலத்தை அழிக்க கூடும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-ஜூலை-202013:03:59 IST Report Abuse
Ramesh Sargam போதாதென்று 40% சம்பளம் cut என்று நேற்று ஒரு செய்தி படித்தேன். தொற்று ஏட்படும் என்று தெரிந்தும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இவர்களின் சம்பளத்தில் அதிகாரிகள் கைவைப்பது எப்படி சரியாகும்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
24-ஜூலை-202011:05:47 IST Report Abuse
Chandramoulli இந்த நோய்யின் தாக்கம் அதிகம் இருந்த காலகட்டத்தில் இவர்கள் செய்த கடின உழைப்புக்கு பாரத் ரத்னா விருது கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள். உரிய மரியாதை பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
24-ஜூலை-202007:39:42 IST Report Abuse
Sanny காக்பிட்டில் வேலை செய்பவர்களுக்கே கொரோனா பரவுகிறது என்றால், பயணம் செய்யும் பிரயாணிகள் எண்ணிக்கை பல மடங்காக இருக்கும். கூடிய பாதுகாப்பு தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X