கொரோனாவில் இறந்த ஆசிரியருக்கு இறுதி சடங்கு செய்த பத்திரிகையாளர்கள்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Odisha, coronavirus, covid 19, coronavirus outbreak

புவனேஷ்வர்: ஒடிசாவில் கொரோனாவால் இறந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் உடலை இறுதி சடங்கிற்கு எடுத்துச்செல்ல உறவினர், அக்கம்பக்கத்தினர் தயங்கியதால், 4 பத்திரிகையாளர்கள் உடலை எடுத்துச்சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் ஷர்கார்க் கிராமத்தில் வசித்து வந்தவர் பீந்தாம்பர் பாதே, ஒய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வேறு நோய் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வெளிநாட்டில் வசிக்கும் இவரது மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.எனினும் மகன்கள் உடனே இந்தியா வரவாய்ப்பில்லை.


latest tamil news




உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் , இறந்த ஒய்வு ஆசிரியர் உடலை இறுதிசடங்கிற்கு எடுத்துச்செல்ல தயங்கினர். தங்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக உடல் அருகே செல்லவும் மறுத்தனர்.

இதையறிந்த அஜித் பாண்டா, பாலாஜி பிரதான், மெகநாத் தாஸ், ஷங்கர் பிரதான் ஆகிய நான்கு பத்திரிகையாளர்கள் , தாங்களாகவே முன்வந்து, பி.பி.ஐ. எனப்படும் தனிமனித பாதுகாப்பு கவச உடையுடன் ஆம்புலனசை வரவழைத்து ஆசிரியர் உடலை எடுத்துச்சென்று இறுதி சடங்கு செய்து உடலை தகனம் செய்தனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜூலை-202017:07:16 IST Report Abuse
தமிழ்வேல் வீரவணக்கம் அன்பர்களே...
Rate this:
Cancel
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
24-ஜூலை-202015:59:42 IST Report Abuse
sivam மனதில் பயமில்லாமல் செய்த இந்த பத்திரிகை நண்பர்களுக்கு கோடானுகோடி புண்ணியம் கிடைக்க ஆண்டவன் அருள் புதிய வேண்டுகிறேன் , நீங்கள் செய்தது மனித செயலில் சேராது,, அந்த தெய்வங்கள் தான் உங்களைவைத்து செய்வதற்கு தூண்டியுள்ளது .உங்களுக்கும் ,, உங்கள் குடும்பங்களுக்கும் ஆண்டவன் நல்ல அருள் கொடுக்கட்டும்/
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-ஜூலை-202012:41:38 IST Report Abuse
Ramesh Sargam ஒரு பக்கம் மனிதநேயமற்ற உறவுகள். மறுபக்கம், மனிதநேயம் உள்ள பத்திரிகை ஆசிரியர்கள். தலை வணங்குகிறேன் அந்த நல்ல உள்ளம் உள்ள பத்திரிகை துறையினருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X