இதிலும் தனி வழியா?: இ--பாஸ் சர்ச்சையில் ரஜினி| Did superstar Rajinikanth obtain an e-pass to travel during lockdown or not? | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதிலும் தனி வழியா?: இ--பாஸ் சர்ச்சையில் ரஜினி

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (48)
Share
சென்னை: 'இ--பாஸ்' பெறும் வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிக்கு மட்டும் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு சென்று வர 'மருத்துவ அவசரம்' என்ற காரணத்தில் பாஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல 'இ--பாஸ்' பெறுவது கட்டாயம். இறப்பு மிகவும் முக்கியமான மருத்துவ சிகிச்சை போன்ற
Rajini, ePass, tamil nadu e pass, Rajinikanth,  ரஜினி, இபாஸ், மருத்துவஅவசரம்

சென்னை: 'இ--பாஸ்' பெறும் வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிக்கு மட்டும் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு சென்று வர 'மருத்துவ அவசரம்' என்ற காரணத்தில் பாஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்ல 'இ--பாஸ்' பெறுவது கட்டாயம். இறப்பு மிகவும் முக்கியமான மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்கு மட்டுமே இ--பாஸ் தரப்படுகிறது. சில தினங்களுக்கு முன் காரில் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் சென்ற ரஜினி இ--பாஸ் பெற்றாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.


latest tamil newsதற்போது சென்னை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு ரஜினி காரில் சென்று வர இ--பாஸ் பெற்றுள்ளார். 'மருத்துவ அவசரம்' என காரணம் கூறி இ--பாஸ் பெறப்பட்டுள்ளது. காரை தானே ஓட்டிச் செல்லும் நிலையில் உள்ள ரஜினிக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படாத நிலையில் பொய்யான காரணத்திற்காக இ--பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு மட்டும் சலுகை தரப்பட்டுள்ளது என்பது இதன் வாயிலாக தெரிய வந்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X