தமிழ்நாடு

பணிக்கு திரும்ப வடமாநில தொழிலாளர் ஆர்வம்: பஸ்சில் அழைத்து வர நிறுவனங்கள் முயற்சி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு, திருப்பூர் பகுதியில் பணி செய்து சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள், பஸ் மூலம் மீண்டும் அழைத்து வரும் முயற்சி கனிந்ததால், ஆக., முதல் வாரத்தில் அதிக அளவில் பணி தொடங்க வாய்ப்புள்ளது.


ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஜவுளி, விசைத்தறி கூடங்கள், குடோன், சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து வகையான தொழிற்சாலைகளிலும், 40 சதவீதத்துக்கு மேல் வடமாநில தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். கொரோனா ஊரடங்கால், வடமாநில தொழிலாளர், 30 ஆயிரம் பேருக்கு மேல், ஈரோட்டில் இருந்து சென்று விட்டனர். இரண்டு மாத தளர்வால், 50 சதவீத தொழிலாளர்களை பயன்படுத்தி அனைத்து நிறுவனங்களும் செயல்பட துவங்கின. ஆனாலும், இ-பாஸ் பெற்று பிற மாவட்ட தொழிலாளர்கள் வந்து செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. வடமாநில தொழிலாளர் ஊர் திரும்ப, ரயில் வசதி இல்லாததால், முடங்கி உள்ளனர். இந்நிலையில் தொழில், வர்த்தக நிறுவனத்தினர், கலெக்டர் கதிரவனிடம் தெரிவித்து, வட மாநில, தொழிலாளர்களை அழைத்து வர, பாஸ் வழங்கும்படி கேட்டு, அனுமதி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்க (ஈடிசியா) துணை தலைவர் திருமூர்த்தி கூறியதாவது: வடமாநில தொழிலாளர்களுக்கு, தினமும், 300 ரூபாய் கூலி போதுமானது. தமிழக தொழிலாளர்களுக்கு, 500 ரூபாய் வரை வழங்க வேண்டி உள்ளது. வடமாநில அனுபவம் இருந்தால் இதில் உயர்வு இருக்கும். ஊரடங்கால், 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வடமாநிலம் சென்று விட்டனர். தற்போது அவர்களே வேலைக்கு வருகிறோம். அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி கேட்டனர். அவர்களை பஸ்சில் அழைத்து வர, முதல்வரிடம் அனுமதி பெற்று, இ-பாஸ் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஒரு பஸ்சில், 30 பேரை அழைத்து வர, 30 ஆயிரம் ரூபாய் வாடகை, இதரவு செலவாகிறது. ஒரு நபருக்கு, 1,000 ரூபாய் என்பதை நிறுவனம் ஏற்று, அழைத்து வர தயாராக உள்ளோம். அவர்களது ஆதார் சான்று அடிப்படையில், மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து, உரிய அனுமதியுடன் வரவழைக்க உள்ளோம். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி, 'நெகட்டிவ்' என வந்ததும், பணியை தொடர்வார்கள். இதற்கு பல நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளதால், விரைவில் தொழில் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X