பொது செய்தி

தமிழ்நாடு

புன்செய்புளியம்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் ஆக்கிரமிப்புகளை, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். புன்செய்புளியம்பட்டி-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை, டாணாபுதூர் முதல், ஆதிபராசக்தி அம்மன் கோவில் வரை, தேசிய நெடுஞ்சாலையின் இருபக்கங்களிலும், கடைகள் முன், விளம்பர போர்டுகள், தகர சீட் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. மேலும், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வளாகம் முன்புள்ள, காந்தி சிலையை சுற்றி, 20க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டன. இது தொடர்பான புகாரால், தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரித்து நோட்டீஸ் தந்தனர். கெடு முடிந்த நிலையில், உதவி கோட்ட பொறியாளர் ரவி தலைமையில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம், நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். முன்னெச்சரிக்கையாக, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


கம்பி வேலி அமைக்கணும்: புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வளாகம் முன், காந்தி, இந்திரா, ராஜிவ், எம்.ஜி.ஆர்., சிலைகளுடன் மண்டபம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமித்து வைக்கும் கடைகளை, நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது அகற்றுகின்றனர். ஆனால், சில நாட்களில் மீண்டும் கடைகள் முளைக்கின்றன. அரசியல் கட்சியினரின் தலையீட்டால், அதிகாரிகள், போலீசாரால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தடுக்க, சிலைகள் அமைந்துள்ள வளாகத்தை சுற்றிலும், கம்பி வேலி அமைத்து, செடிகள் மற்றும் புல்வெளிகள் அமைத்து பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X